பாக்டீரியாக்களின் பரிணாம வளர்ச்சி

அதிக எதிர் உயிர்மமருந்துகளை(anti-biotics) உபயோகிப்பதால் ஏற்படும் விணைகளை மிக எளிதாக விளக்கும் ஒரு படத்தை The Atlantic இணையதள பதிவில் பார்க்கலாம்.

பல நேரங்களில் நாம் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை அவர் சொல்படி உட்கொள்வதில்லை. அவர் 10 நாட்கள் ஒரு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் நாம் நம் உடல்வலி குணமானவுடன் அம்மருந்துகளை நிறுத்தி விடுகிறோம். பிரச்சனை என்னவென்றால் நமக்கு நம் உடல் நலமாக உள்ளதாக தோன்றினாலும், மிச்ச சில பாக்டீரியாக்கள் இன்னும் நம் உடலில் இருக்கலாம். அவை நாம் எடுத்துக்கொண்ட மருந்தைகளை விட வலிமையானதொறு பரிணாம வளர்ச்சியை அடைந்து, பின்னாளில் அந்த மருந்துகள் பாக்டீரியாக்களை கொல்லமுடியாமல் பயனற்றதாகி விட, நாம் அதைவிட சக்தி வாய்ந்த மருந்தை உட்கொள்ள வேண்டிவரும். அதே பாக்டீரியாக்கள் இந்த சக்தி வாய்ந்த மருந்துகளை சந்திக்கும்போது இன்னுமொறு பரிணாம வளர்ச்சியை அடைய அந்த மருந்துகளும் செயலற்றதாகிவிடும். தேவையில்லாமல் மருத்துவர் எதிர் உயிர்மமருந்துகளை ஒரு நோயாளிக்கு கொடுப்பதும் ஒரு மிகப்பெரிய காரணம்.

2050 காலங்களில் இது மிகப்பெரிய பிரச்சனையாக கண்டிப்பாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்பொழுதே ஒருசில நோயாளிகள் மிக சக்தி வாய்ந்த எதிர் உயிர்மமருந்துகளால் எந்த பயனும் இல்லாமல் இறக்கின்றனர்.

மேலும் சக்தி வாய்ந்த மருந்துகளால் நம் உடம்புக்கு அதிக தீங்கும் உண்டு. கண்டிப்பாக பதிவில் உள்ள படத்தை பாருங்கள். கடவுள் இந்த உலகத்தை உருவாக்கினான் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டும் 😏