ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கும் மக்களும்

கீற்று இதழ் கட்டுரை:

கொள்ளையே தியாகம்; பார்ப்பனியமே சமூகநீதி; ஊடகங்களோ மாமாக்கள்; அதிகார வர்க்கம்தான் கமிஷன் ஏஜெண்டு; போலீசு துறை ஏவல் நாய்; சர்வாதிகாரமே நிர்வாகத் திறன்; சதிச்செயலே சாணக்கியம்; ஆளப்படும் மக்களுக்குப் பாசிசம்; ஆளும் வர்க்கங்களுக்குப் பரிகாரம்; அசுரர்களுக்கு நஞ்சு; தேவர்களுக்கு அமிழ்தம்; இவைதான் பாசிச ஜெயா உருவாக்கியிருக்கும் அரசியல் அகராதி.

இந்தியச் சமுதாயம் தெரசாவை மட்டுமல்ல; பாசிச எம்.ஜி.ஆரைக் கூட வள்ளலாகப் போற்றுகிறது. பாசிச இந்திராவை அன்னையாக்குகிறது. பாசிச ஜெயாவை அம்மாவாக்கித் துதிக்கின்றது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கூட அதிகாரமிக்கவர்களாக வலம் வருகிறார்கள். ஆனால் தவறை தட்டிக் கேட்பவர்களின் குரல்வளைகள் எப்போதும் அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பால் சசிகலா உள்ளே செல்ல, தமிழர்கள் அவர்களின் ஆர்ப்பரிப்பில், இத்தீர்ப்பு ஜெயலலிதாவையும் குற்றவாளி என்று கூறுகிறது என்பதை மறந்துவிட்டதைப்போல் நடந்து கொள்கின்றனர். ஜெயலலிதா ஆட்சியென்றால் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு 2011-2016 காலங்களில் போய்விட்டது. ஊழலும் வன்முறையும் தலைவிரித்தாட, தொழில்கள் நலிவடைந்து, அரசு முடங்கிப்போய், தமிழக தொழில்துறை பலம் இழந்து கொன்டிருக்கின்றது. ஜெயலலிதா ஆட்சி, தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சி அல்ல.

ஓ.பன்னீர்செல்வம் ஒன்றும் சளைத்தவர் அல்ல. முதல்அமைச்சராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா எதிர்த்த அனைத்து மத்தியஅரசின் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டு, “ஜெயலலிதா என்னை வழிநடத்துகிறார்” என்று நாடகமாடுகிறார். அனைவரும் சசிகலாவை எதிர்க்கிறோம் என்றபேரில் பன்னீர்செல்வத்தை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். சசிகலா ஆட்சியில் இருந்தால் அவர் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பார், மத்திய அரசின் திட்டங்களுக்கு உதவிபுரிவார் எனறு நம்பமுடியாது. இதே பன்னீர்செல்வம் என்றால், நமக்கு ஏற்றபடி நடப்பார் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு அவரை ஆதரிக்கிறது. ஜெயலலிதா இறந்து 2 மாதங்கள் கழித்த பன்னீர்செல்வத்தின் வீரம் மத்திய அரசின் வீரம். இவரிருவரும் “ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்” என்பதை மக்கள் மறந்துவிட்டார்களா?