நடிக்கத் தெரிந்த எம்.ஜி.ராமச்சந்திரன்

ராஜநாயகம் எம்.ஜி.ராமச்சந்திரனின் நடிப்புத் திறமையை பட்டியலிடும் வலைப்பூ.

இன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர் நடிப்பில் புது பரிமாணம் வந்து விடும்.கூடு விட்டு கூடு பாய்வது போல ஆளே மாறிவிடுவார். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் துவங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபுணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளட்டும்.’போயும்,போயும் மனிதனுக்கிந்த புத்தியைக்கொடுத்தானே’ பாடல் காட்சி , ‘எங்கள் தங்கம்’ படத்தில் மொட்டையாக ஐயர் வேடமிட்டு கதாகாலட்சேபம் செய்யும்போது பார்க்கவேண்டும்.

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த எந்தப் படத்தில் மாறுவேஷமிட்டாலும் விஷேச பரிமாணத்தை தொடுவதை காணமுடியும். தனிப்பிறவி படத்தில் ஒரு காட்சியில் முருகன் வேடம் போட்டவர்.பொருத்தமாயிருக்கும். காதல் வாகனம் படத்தில் ஆங்கிலோ இந்தியப்பெண் வேடம்! அவர் ஏசுநாதர் ஆக நடிக்க ஒரு படம் பூஜை போடப்பட்டது.அப்போது அவர் ஏசு வேடத்தில் நடிக்க எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் இப்போது கூட பார்க்க கிடைக்கின்றன.சாந்த சொரூபியாக ஏசு போலவே தான் இருப்பார்.

Jesus_mgr.jpg ஸ்ரீ எம்.ஜி.ஆர் ப்ளாக்கில் இருந்து இதைப் பற்றிய செய்தி. எவ்வளவு உண்மை என்று தெரியாது. ஆனால் படிக்க நன்றாக இருந்தது. நான் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். ரவீந்திரன் எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த இயேசு நாதர் படத்தின் கதை எழுத்தாளர். படபூஜை போட்ட 30 நாட்களில் படம் நிறுத்தப்பட்டு விட்டது, எம்.ஜி.ஆர் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்ட காரணத்தினால். ரவீந்திரன் எம்.ஜி.ஆரிடம் வினவியபோது, அதற்கு எம்.ஜி.ஆர், சில கிராமங்களில் அவருடைய இயேசு நாதர் படத்தின் புகைப்படத்தை சிலர் இயேசுவாக நினைத்து வழிபாடு செய்தார்களாம். இது பிடிக்காத காரணத்தினால், அவர் படத்திலிருந்து விலகிவிட்டாராம்.

எனக்கு என் சொந்தங்கள் எம்.ஜி.ஆருக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்லும் போது சிரிப்பாகத்தான் இருக்கும். இன்றளவும் நான் எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா பார்க்கிறேன், பார்த்துக் கொண்டே இருக்கிறேன். 1000 தடவை இருக்கும். சலிக்கவே இல்லை. அதுவும் அன்பே வா புதிய பரிமாணம்.

Charisma என்பதற்கு அடையாளம் எம்.ஜி.ஆர். தேஜஸ் என்ற விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக்குறிப்பிட முடியுமா?ஜனவஸ்யம்,ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரை சொல்லமுடியுமா?

ராஜநாயகம்