பள்ளிகள் என்னும் நரகம்

கீற்று இதழ்:

மதுரையில் பார்ப்பன பாரதி பணியாற்றிய சேதுபதி பள்ளியில் குருபூர்ணிமா அன்று(08/07/2017) ஆர்.எஸ்.எஸ் ஆசிரியர்களின் காலை மாணவர்களை வைத்து வலுக்கட்டாயமாக கழுவ வைத்திருக்கின்றார்கள். மேலும் பள்ளியில் கோ பூசை, கங்கா பூசை போன்றவற்றையும் செய்திருக்கின்றார்கள். எவ்வளவு பார்ப்பனக் கொழுப்பும், பார்ப்பன அடிவருடித்தனமும் இருந்திருந்தால் மாணவர்களை கண்ட பொறுக்கி ஆர்.எஸ்.எஸ் ஆசிரியர்களின் காலை கழுவ வைத்திருப்பார்கள். இவர்களை எல்லாம் ஆசிரியர்கள் என்று விளிப்பதே மிகவும் கேவலமாகும்.

என்ன ஒரு திமிர். இது உண்மையாக இருந்தால் இதைவித கேவலம் எதுவும் இருக்க முடியாது. இங்கே ஆசிரியர் என்று எவரும் கிடையாது. இவை பள்ளிக்கூடங்களும் அல்ல. இப்படி நடந்ததை கேள்விப்பட்டபின்னும் அமைதியாக இருக்கும் பெற்றோரே அனைத்திற்கும் காரணம்.

பிள்ளைகளின் ஆர்வத்தையும், கேள்வி மனப்பான்மையையும் அடியாலும், மிரட்டலாலும் பிள்ளைகள் அந்த நரகத்தில் அவர்களுடைய மானமரியாதையை இழந்து ஒரு மாட்டின் நிலைக்கு கொண்டுவரப்படுகிறார்கள்.