மகளிர் தினம் - யாருக்காக?

பாமரன்:

ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் இன்றைக்கும் குற்ற உணர்ச்சியோடு கூனிக்குறுகி நிற்பது துப்புரவுப் பணிகளில் இருக்கும் நம் சகோதரிகளை நினைத்துத்தான்.

எத்தனை கோடி கொடுத்தாலும் நானும், என் தாயும் துணைவியும் செய்யக் கூசும் பணிதான் அவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை. இந்த ஊர் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களை அசுத்தப்படுத்திக் கொள்கிறவர்கள் அவர்கள்.